• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யக்கல, வெரல்லவத்த நடுத்தர வகுப்பினர்களுக்கான வீடமைப்புக் கருத்திட்டத்தை செயற்படுத்துதல்
- நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் யக்கல, வெரல்லவத்த பிரதேசத்தில் 500 வீடுகளைக் கொண்ட நடுத்தர வகுப்பினர்களுக்கான வீடமைப்புக் கருத்திட்டமொன்றினை 03 கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதலாம் கட்டத்தின் கீழ் 12 மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் 600 சதுர அடிகள் உள்ள 132 வீடுகளும் 900 சதுர அடிகள் கொண்ட 22 வீடுகளுமாக 154 வீடுகளை நிர்மாணிப்பதற்குத் தேவையான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கருத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டு செலவு 1,503.30 ரூபாவாகும். நிர்மாணிப்புக்கான செலவுகள் முன் விற்பனை மூலம் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.