• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சொய்சாபுற மீள் வீடமைப்புக் கருத்திட்டத்தின் கீழ் 30 வீடுகளைக் கொண்ட இரண்டு கட்டடங்களை நிர்மாணித்தல்
- சொய்சாபுற வீடமைப்பு திட்டம் அமைந்திருந்த காணியில் சேதமடைந்த நிலையிலுள்ள இரண்டு மாடி குறைந்த வாடகை வீடுகள் 48 மற்றும் அத்துமீறிய 24 குடிசைகள் என்பவற்றை புனரமைப்பதற்கு 20 வீடுகள் வீதமான ஐந்து கட்டடங்களை நிர்மாணிப்பதற்காக சொய்சாபுற மீள் வீடமைப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்தும் பொருட்டு 2014 ஒக்றோபர் மாதம் 16 ஆம் திகதியன்று அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கிணங்க மூன்று (03) கட்டடங்களில் 60 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு இந்தக் குடும்பங்கள் குடியமரத்தப்பட்டுள்ளன. மீதி இரண்டு கட்டடங்களிலுள்ள 40 வீடுகள் முன் விற்பனை அடிப்படையில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் தற்போது நடைமுறையிலுள்ள ஏற்பாடுகளின் கீழ் சுமார் 30 வீடுகள் மாத்திரமே நிர்மாணிக்க முடியுமென அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சொய்சாபுற வீடமைப்புக் கருத்திட்டத்தின் கீழ் 550 சதுர அடிகள் கொண்ட 20 வீடுகள் உள்ள கட்டடமொன்றும் 10 வீடுகள் கொண்ட கட்டடமொன்றுமாக 30 வீடுகளை முன் விற்பனை அடிப்படையில் நிர்மாணிக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.