• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்லேகலே உத்தேச இராணுவ ஆதார வைத்தியசாலைக்கான கட்டட மொன்றை நிர்மாணித்தல்
- கண்டி பிரதேசத்திலும் அதற்கண்மித்த மாவட்டங்களிலும் சேவை புரியும் மற்றும் குடியிருக்கும் இராணுவத்தினருக்கு ஆரம்ப மருத்து சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதற்காக கண்டி பல்லேகலேயில் புதிய ஆதார வைத்தியசாலையொன்றை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு 03 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதோடு, 376.22 மில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இலங்கை தரைப்படையின் தொழில்சார் ஏனைய பதவியினர்களின் பங்களிப்புடன் உத்தேச வைத்தியசாலையை ஒரு (01) வருட காலத்திற்குள் நிர்மாணித்து முடிப்பதற்கும் இதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை திறைசேரியிடமிருந்து ஒதுக்கிக் கொள்வதற்கும் பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.