• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பொலன்நறுவை பண்ணையிலுள்ள 1,000 ஏக்கரில் Fodder Silage Baling கருத்திட்டமொன்றைத் தாபித்தல்
- தரம்மிக்க கடின உணவு இல்லாமை தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பாரிய பாற்பண்ணைகள் முகங்கொடுக்கும் பிரதான பிரச்சினையொன்றாக இனங்காணப்பட்டுள்ளதோடு, பொதுவாக கறவைப் பசுவொன்றுக்கு அதன் உடல் எடையின் சுமார் 10 சதவீதம் கடின உணவு வழங்கப்படுதல் வேண்டும். இந்த நிலைமைக்கு தீர்வொன்றாக தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பொலன்நறுவை பண்ணையிலுள்ள 1,000 ஏக்கரில் Fodder Silage Baling கருத்திட்டமொன்றைத் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இந்த பண்ணையில் 1,000 ஏக்கரில் போஷாக்கு மிக்க சோளம் மற்றும் சோகம், பயிரிட்டு இயந்திரங்களின் மூலம் Baling செய்யப்பட்ட Silage உற்பத்தி செய்வதற்கும் அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 2,000 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்து இந்தப் பண்ணையில் வளர்ப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த கருத்திட்டத்திற்காக மதிப்பிடப் பட்டுள்ள மொத்த மூலதன செலவிலிருந்து 60 சதவீதம் அரசாங்கத்தின் பங்களிப்பாக பெற்றுக் கொள்ளும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.