• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
லக்சல நிறுவனத்தின் தொழிற்படு மூலதன தேவையின் பொருட்டு அத்தியாவசிய நிதி உதவியினைப் பெற்றுக் கொள்ளல்
- COVID - 19 தொற்று நிலைமை காரணமாக வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைதராமையினால் லக்சல நிறுவனத்தின் விற்பனை வருமானம் 90 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக நிறுவனத்தை சிரமத்தின் மத்தியில் நடாத்திச் செல்லவேண்டியுள்ளது. ஆதலால், லக்சல நிறுவனத்தை நடாத்திச் செல்வதற்குத் தேவையான ஊழியர் சம்பளம் உட்பட ஏனைய அத்தியாவசிய செலவுகள் அடங்கலாக தொழிற்படு மூலதன தேவையின் பொருட்டு அத்தியாவசியமான நிதி ஏற்பாடுகளை பொது திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.