• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுவர் செயலகத்தின் நிறுவனப் பெயரை 'முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம்' எனத் திருத்துதல்
- 1979 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டுள்ள 'சிறுவர் செயலகம்' முன் பிள்ளைப்பருவ பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பிலான தேசிய கொள்கையினை நடைமுறைப்படுத்தும் மைய நிறுவனமாக செயலாற்றுகின்றது. இந்த நிறுவனம் முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான கல்வி துறைக்கு உரியதாகவும் முக்கிய பணியினை நிறைவேற்றி வருகின்ற போதிலும் நிறுவனத்தின் தற்போதைய பெயரானது இதனை வௌிக்காட்டாமை தெரியவந்துள்ளது. ஆதலால், 'சிறுவர் செயலகம்' என்னும் நிறுவனத்தின் பெயரை 'முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் (National Secretariat for Early Childhood Development)' எனத் திருத்தும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.