• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற 4 வீடமைப்புக் கருத்திட்டங்களின் நிதி செலுத்தும் முறையினைத் திருத்துதல்
- குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக கருத்திட்டமொன்றுக்கு 300 மில்லியன் ரூபா வீதம் நான்கு கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் நிதி உதவியினை வழங்கியுள்ளதோடு, உரிய கருத்திட்டங்கள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக செயற்படுத்தப்படுகின்றது. பயனாளிகள் அவர்களுடைய செலவில் உரிய நிர்மாணிப்புகளை கட்டம் கட்டமாக பூர்த்தி செய்ததன் பின்னர் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் இந்திய உயர்ஸ்தாணிகராலயத்திற்கு சமர்ப்பிக்கப்படும் முன்னேற்ற அறிக்கையின் மீது உரிய தொகையானது விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆயினும், இவ்வாறு செயலாற்றுவதற்குத் தேவையான நிதி பயனாளிகளிடம் இல்லாமையினால் கருத்திட்டத்தின் முன்னேற்றம் கீழ் மட்டத்தில் உள்ளதோடு, வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்திலேயே குறித்த கட்டத்திற்கு தேவையான தவணைத் தொகையை வழங்குவதற்கும் அதன் பின்னர், நிர்மாணிப்பின் முன்னேற்றத்திற்கு அமைவாக மீதி தவணைத் தொகைகளை விடுவிப்பதற்கும் இந்திய உயர்ஸ்தாணிகராலயம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.