• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1968 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனச் சட்டத்தைத் திருத்துதல்
- 1976 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க, 1982 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, 2006 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, 2019 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க சட்டங்களினால் திருத்தப்பட்ட 1968 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனச் சட்டத்தை மேலும் திருத்துவதற்கு 2015 திசெம்பர் மாதம் 02 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் இசைவாக்கம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.