• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மஹிந்த ராஜபக்‌ஷ தேசிய ரெலி சினிமா பூங்காவின் அத்தியாவசிய புனரமைப்புப் பணிகளை மேற்கொள்தலும் மீளத் தாபித்தலும்
- உள்நாட்டு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடக தயாரிப்பு துறைக்கு தேவையான திரைப்படக்கூடம், பின்னணி காட்சி வசதிகள் மற்றும் இந்த துறைசார்ந்த கலைஞர்களுக்கு தங்குமிடம் மற்றும் ஏனைய வசதிகளை சலுகை அடிப்படையில் வழங்குவதன் மூலம் உள்நாட்டு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடக துறையில் புத்தூக்கத்தை ஏற்படுத்துவதற்காக மஹிந்த ராஜபக்‌ஷ தேசிய ரெலி சினிமா பூங்கா தாபிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 13 உள்நாட்டு திரைப்படங்களும் 18 தொலைக்காட்சி நாடகங்களும் 8 விளம்பர பாடல்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டு காலப்பகுதிக்குள் இந்தப் பூங்கா உரிய முறையில் பராமரிக்கப் படாமையினால் இந்த நிறுவனத்திலுள்ள பௌதிக வளங்கள் சேதமடைந்து வருகின்றன. ஆதலால், இந்த ரெலி சினிமா பூங்காவின் அத்தியாவசிய புனரமைப்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளதோடு, இதன் பொருட்டு 2021 ஆம் 2022 ஆம் ஆண்டுகளில் பொதுத் திறைசேரியிடமிருந்து நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்கிக் கொள்ளும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.