• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஏற்றுமதி சந்தைக்காக பகுதியளவு உருக்கு றேடியல் டயர்கள் மற்றும் முழு அளவிலான உருக்கு றேடியல் டயர்கள் உற்பத்தி செய்வற்கான கருத்திட்டம்
- ஏற்றுமதி சந்தைக்காக பகுதியளவு உருக்கு றேடியல் டயர்கள் மற்றும் முழு அளவிலான உருக்கு றேடியல் டயர்கள் உற்பத்தி செய்வற்கு அம்பாந்தோட்டை சருவதேச துறைமுகத்தில் கருத்திட்டமொன்றைத் தாபிக்கும் பொருட்டு சீனாவின் Shandong Haohua Tire Co. Limited நிறுவனத்தினால் 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முதலீட்டுடனான கருத்திட்டப் பிரேரிப்பொன்றை முதலீட்டுச் சபைக்கு முன்வைத்துள்ளது. 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க திறமுறை அபிவிருத்தி (திருத்த) சட்டத்தின் கீழ் திறமுறை அபிவிருத்தி கருத்திட்டமொன்றாக இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கு இலங்கை முதலீட்டுச் சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 36 மாத காலப்பகுதிக்குள் கருத்திட்ட செயற்பாட்டினை ஆரம்பிப்பதற்கும் மொத்த உற்பத்தியில் ஆகக்குறைந்தது 80 சதவீதத்தை ஏற்றுமதி செய்வதற்கும் உட்பட்டு, திறமுறை அபிவிருத்தி கருத்திட்ட சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் உரிய வரிச் சலுகைகளை வழங்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப் பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.