• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
95.86 கிலோ மீற்றர் நீளமான வடமத்திய பாரிய கால்வாயை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தின் 27.7 கிலோமீற்றர் நீளமான சுரங்கவழிப் பகுதியை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை கையளித்தல்
- ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியின் கீழ் செயற்படுத்தப்படும் மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் பொதியொன்றாக கோந்துருவாவயிலிருந்து நாமல்புர வரை மின்னேரிய, கிரிதலே, ஹூருளு பாதுகாப்பு வனாந்தரம் மற்றும் சரணாலயம் என்பவற்றின் நிலத்தடியின் ஊடாக 27.7 கிலோமீற்றர் நீளமான சுரங்கவழிப் பாதையை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குப் பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்வதற்கு சருவதேச போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவை யினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தத்தை China State Construction Engineering Corporation Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.