• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020‑12‑01 ஆம் திகதியிலிருந்து 2021‑07‑31 ஆம் திகதி வரையிலான எட்டு (08) மாத காலத்திற்குள் பெற்றோல் இறக்குமதி செய்வதற்கான தவணைக்கால ஒப்பந்தத்தை வழங்குதல்
- 2020‑12‑01 ஆம் திகதியிலிருந்து 2021‑07‑31 ஆம் திகதி வரையிலான எட்டு (08) மாத காலத்திற்குள் 1,564,500 +10/-5% பெரல் பெற்றோல் (92 Unl) மற்றும் 535,500 +10/-5% பெரல் பெற்றோல் (95 Unl) இறக்குமதி செய்வதற்கான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பதிவு செய்யப்பட்ட வழங்குநர்களிடமிருந்து கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய கேள்வியை சிங்கப்பூர் M/s. BB Energy (Asia) Pte. Lte., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.