• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'சுரக்‌ஷா' மாணவர் காப்புறுதி காப்பீடு - 2020/2021
- 'சுரக்‌ஷா' மாணவர் காப்புறுதி காப்பீட்டினைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கத்திற்குச் சொந்தமான காப்புறுதி சேவை வழங்குநர்களிடமிருந்து பிரேரிப்புகள் கோரப்பட்டதோடு, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மாத்திரம் இதற்கான பிரேரிப்புகளை முன்வைத்துள்ளது. இதற்கிணங்க, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பேச்சுகளின் பின்னர், அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 'சுரக்‌ஷா' மாணவர் காப்புறுதி காப்பீட்டினைப் பெற்றுக் கொள்வதற்கான கேள்வியினை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.