• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கலாபவனத்தை விருத்தி செய்து பாதுகாத்தல்
- தேசிய கலாபவனத்தை புனரமைப்பதற்குரியதாக பல சந்தர்ப்பங்களில் அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதோடு, 2018 ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்காக 42 மில்லியன் ரூபா நிதி ஏற்பாட்டினை ஒதுக்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை. தற்போது இதன் பிரதான கட்டடத்தில் மழைநீர் வழிந்தோடுவதற்காக பொருத்தியுள்ள பிரதான மழைநீர் வழிந்தோடும் திறந்த குழாயிலிருந்து நீர் கசிவதன் காரணமாக இந்த கட்டடமானது சேதமடைந்துள்ளதோடு, துரிதமாக திருத்த வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளது. ஆதலால், இலங்கை கடற்படையின் சேவையினைப் பெற்றுக் கொண்டு தேசிய கலாபவனத்தின் திருத்த வேலைகளை செய்து கொள்ளும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.