• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2021 ஆம் ஆண்டு சார்பில் கால்நடை வளங்கள் அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் கீழ் 2021 ஆம் ஆண்டு சார்பில் 'சௌபாக்கியா' கறவைப் பசுக்கள் அபிவிருத்தி கருத்திட்டம் மற்றும் உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு 'கறவைப் பசுக்கள் அபிவிருத்தி நிலைய' கருத்திட்டம் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 'சௌபாக்கியா' கறவைப் பசுக்கள் அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் விலங்கு இனப்பெருக்கத்தினை வினைத்திறன் மிக்கதாக்குதல், விலங்கு போஷாக்கினை அதிகரித்தல், விலங்கு சுகாதார தரத்தினை அதிகரித்தல் மற்றும் விலங்கு கழிவுகள் முகாமைத்துவத்தின் மூலம் சுற்றாடல் நட்புறவுமிக்க பண்ணைகளை உருவாக்குதல் போன்றவை திட்டமிடப்பட்டுள்ளன. அதே போன்று 'கறவைப் பசுக்கள் அபிவிருத்தி நிலையங்களை' தாபிக்கும் கருத்திட்டத்தின் மூலம் செயற்கை சினையூட்டல் நிலையங்களை விருத்தி செய்தல், இதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ளல், கால்நடை மருத்துவ அலுவலகங்களை இணையமயப்படுத்தல் போன்ற பணிகளின் உடாக பால் சங்கிலிச் செயற்பாட்டினை அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, இந்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 2021-2023 நடுத்தவணைகால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.