• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வாகன இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரங்கள் என்பவற்றை விரைவு தபால் மூலம் சேவை பெறும் பொது மக்களுக்கு வழங்குவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்தல்
- வாகனமொன்றினை பதிவுசெய்யும்போது வாகனத்திற்கான பதிவுச் சான்றிதழ், வாகன இலக்கத் தகடுகள், ஸ்டிக்கர்கள் என்பன வழங்கப்படுகின்றன. நடைமுறையிலுள்ள வழிமுறையின் கீழ் இவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு கணிசமான காலமும் அதேபோன்று செலவையும் ஏற்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு செல்லவேண்டியுள்ளது. அதேபோன்று சாரதி அனுமதிப் பத்திரங்களை பதிவுத் தபாலில் சேவை நாடுநருக்கு அனுப்பும் போது கால தாமதம் ஏற்படுகின்றமையும் கூட தெரியவந்துள்ளது. இதற்கு மாற்று வழியாக தபால் திணைக்களத்தினால் செயற்படுத்தப்பட்டுள்ள விரைவு தபால் சேவையின்ன ஊடாக இவற்றை சேவை நாடுநர்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று ஒப்படைப்பதற்கு இயலுமாகும் வகையில் பொருத்தமான வேலைத் திட்டமொன்றை தபால் திணைக்களத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.