• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விளையாட்டு பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், விளையாட்டு பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் விளையாட்டு புலமைபரிசில் பெறுநர்களின் ஊட்டச்சத்து உதவித் தொகை உட்பட ஏனைய கொடுப்பனவுகளை அதிகரித்தல்
- 1989 ஆம் ஆண்டில் நாட்டின் சகல மாவட்டங்களையும் தழுவும் விதத்தில் மாவட்டம் ஒன்றில் ஒன்று என்னும் அடிப்படையில் விளையாட்டு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நோக்கத்தினை மிக பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து நிகழ்ச்சித்திட்டமொன்றினை வகுத்துள்ளன. இதற்கிணங்க, கல்வி அமைச் சரினாலும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் கூட்டு பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* தற்போதுள்ள 26 விளையாட்டு பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்.

* பின்வரும் பாடசாலைகளை விசேட விளையாட்டு பாடசாலைகளாக அபிவிருத்தி செய்தல்.

i. சூரியவெவ சருவதேச கிரிக்கட் விளையாட்டு மைதான மனையிடத்தில் 'கிரிக்கட் விளையாட்டு பாடசாலை' என்னும் இரு மொழிமூல புதிய தேசிய பாடசாலையொன்றை ஆரம்பித்து அபிவிருத்தி செய்தல், 2021 ஆம் ஆண்டிலிருந்து தரம் 6 இற்கு மாணவர்களை சேர்த்தல்.

ii. பெல்வத்த நவோத்யா பாடசாலையை மெய்வல்லுநர் விளையாட்டுக்கள் / கரப்பந்தாட்டம் என்பவற்றுக்கான பாடசாலையொன்றாக அபிவிருத்தி செய்தல்.

iii. பிட்டிபன மஹிந்த ராஜபக்‌ஷ பாடசாலையை மெய்வல்லுநர் விளையாட்டுகளுக்கென அபிவிருத்தி செய்தல்.

iv. மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தை காற்பந்து / மெய் வல்லுநர் விளையாட்டுகளுக்கென அபிவிருத்தி செய்தல்.

* விடுதி வசதியற்ற விளையாட்டு பாடசாலைகளில் புதிதாக விடுதிகளை நிர்மாணித்தல் மற்றும் தற்போதுள்ள விடுதிகளை அபிவிருத்தி செய்தல்.

* விளையாட்டு புலமைபரிசில் உட்பட ஏனைய கொடுப்பனவுகளை தற்காலத்துக்கு ஏற்றவாறு அதிகரித்தல்.