• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிங்கபுர தொடர்மாடி வீடமைப்புக் கருத்திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 48 வத்த என்னும் காணியை நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்ளல்
- திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் பிரிவில் வனாத்தமுல்ல கிராமத்தில் அமைந்துள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான 0.4423 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்றை இரண்டு கட்டங்களின் கீழ் கொழும்பு மாநாகர எல்லைக்குள் குறைந்த வசதிகளுக்கு மத்தியில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 120 குடும்பங்களுக்கு சிங்கபுர தொடர்மாடி வீடமைப்புக் கருத்திட்டத்தின் கீழ் வீட்டு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டமானது 2007 ஆம் ஆண்டில் முன்னாள் வீடமைப்பு என்னும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சின் கீழ் இருந்த நிறுவனமொன்றான Real Estate Exchange (Pvt.) Limited கம்பனியினால் செயற்படுத்தப்பட்டுள்ளதோடு, இதன் பொருட்டு திறைசேரி யிலிருந்து கிடைக்கப்பெற்ற 174.15 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. உரிய வீடுகள் வழங்கப்பட்ட குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு உறுதிகளை வழங்குவதற்கு இந்தக் காணித் துண்டுகளை இறையிலிக் கொடையொன்றாக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்வதற்காக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.