• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு பாராளுமன்ற அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ளல்
- 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஆறு (06) வர்த்தமானி அறிவித்தல்கள், 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, அரசிறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு சுங்க கட்டளைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் சுங்கத் தீர்வை மீதான மேலதிக கட்டணம் விதிப்பதற்குரியதாக வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் என்பனவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.