• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரவுசெலவுத்திட்ட விவாதத்திற்கான நிகழ்ச்சிநிரல் - 2021
- 2021 நிதியாண்டுக்குரியதாக பாராளுமன்ற சபை முதல்வரின் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட விவாதம் தொடர்பிலான நிகழ்ச்சிநிரலும் பாராளுன்ற எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட குழுநிலை நிகழ்ச்சிநிரலும் மாண்புமிகு பிரதம அமைச்சரினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கிணங்க, வரவுசெலவுத்திட்ட உரையானது 2020 நவெம்பர் மாதம் 17 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்படவுள்ளதெனவும் வரவுசெலவுத்திட்டத்திற்கான இரணடாம்நிலை வாசிப்பானது 2020 நவெம்பர் மாதம் 18 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதிவரையிலும் குழுநிலை விவாதமானது 2020 நவெம்பர் மாதம் 23 ஆம் திகதியிலிருந்து 2020 திசெம்பர் மாதம் 10 ஆம் திகதிவரையிலும் 16 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதெனவும் மூன்றாம்நிலை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 2020 திசெம்பர் மாதம் 10 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ளதெனவும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.