• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சார்பில் பராமரிப்பு மற்றும் அவசர இடரின் போது உடனடியாக ஈடுபடுத்தும் கப்பலொன்றினை வாடகைக்கு எடுத்தல்
- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சார்பில் பராமரிப்பு மற்றும் அவசர இடரின் போது உடனடியாக ஈடுபடுத்தும் கப்பலொன்றை வாடகைக்கு எடுப்பது சம்பந்தமாக 2020 யூலை மாதம் 22 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதோடு, இலங்கை கடற்படையினால் பராமரிப்பு மற்றும் அவசர இடரின் போது உடனடியாக ஈடுபடுத்தும் கப்பலொன்றை கொள்வனவு செய்து உரிய சேவைகளை வழங்கும் சாத்தியம் பற்றி ஆராய்வது பொருத்தமானதெனவும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிணங்க, வலுசக்தி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் உரிய உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் போது உடன்பாடு காணப்பட்டுள்ளவாறு இலங்கை கடற்படையினால் புதிய பராமரிப்பு மற்றும் அவசர இடரின் போது உடனடியாக ஈடுபடுத்தும் கப்பலொன்றை கொள்வனவு செய்து இதன் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தனித்த முனை மிதவை நங்கூர சங்கிலி பிணைப்பிடத்திற்கு கப்பல்களை கொண்டுவருதல், எரிபொருள் இறக்கல் கையாள்கை மற்றும் தேவையான வேறு சேவைகளை வழங்குதல் என்பன பொருட்டு இந்தக் கப்பலை Colombo Dockyard கம்பனியினால் கொள்வனவு செய்வதற்காக வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.