• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ரொபோ தொழினுட்ப பாவனை பற்றிய சிறப்பு நிலையத்தினைத் தாபித்தல்
- ரொபோ தொழினுட்ப பாவனை பற்றிய சிறப்பு நிலையத்தினைத் தாபிப்பதற்காக 2016 ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அரசாங்க மற்றும் தொழினுட்ப நுகர்வோர் சார்பில் ரொபோ முறைமைகள் மற்றும் வாகனங்களை வடிவமைத்தல், விருத்தி செய்தல் மற்றும் இது தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்தல் என்பவற்றுக்கான தொழினுட்ப பரிமாறல் நிலையமொன்றாக செயலாற்றுவதற்கு இந்த நிலையத்தை தாபிப்பதன் மூலம் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையத்தின் பிரயோக முறைமை மூலம் பல உள்நாட்டுக் கைத்தொழில்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்கும் நிலையத்தினை நடாத்திச் செல்வதற்குத் தேவையான நிதியினை பிறப்பித்துக் கொள்வதற்கும் வாய்ப்புள்ளது. இதற்கிணங்க, 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றாக தாபித்து அதன் பணிகளை நடாத்திச் செல்லும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.