• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிங் மற்றும் நில்வளா கங்கைகளின் நீரினை வினைத்திறன் மிக்கதாக பயன்படுத்துவதற்கென முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கிங் நில்வளா திசை திருப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- கிங் மற்றும் நில்வளா கங்கைகளின் மூலம் முறையே 2,000 கன மீற்றர் மற்றும் 1,200 கனமீற்றர் நீர் கடலுக்கு செல்கின்றது. இந்த கங்கைகளின் மேலதிக நீரினை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிலவும் குடிநீர் மற்றும் நீர்பாசன பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கும் இந்த இரண்டு கங்கைகளினதும் வௌ்ளப்பெருக்கு நிலைமையை கட்டுப்படுத்துவதற்கும் கிங் - நில்வளா கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரியதாக நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த பிரேரிப்புகளையும் துரிதமாக கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தேவையையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, உள்நாட்டு நிதியத்தின் கீழ் கட்டம் கட்டமாக இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.