• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் தேசிய மரபுரிமைகளை குறித்துரைத்தலும் இனங்காண்பதற்கு பொருத்தமான வழிமுறையொன்றைச் சமர்ப்பித்தலும்
- இலங்கையில் தேசிய மரபுரிமைகளை திட்டவட்டமாக இனங்காண்பதற்கு குறித்துரைக்கப்பட்ட தகவுதிறன்களோ அல்லது வழிமுறைகளோ இல்லாமையினால் பிரச்சினைகள் எழுந்துள்ளன. ஆதலால், இலங்கையின் கலாசார அடையாளத்தை உறுதி செய்யும் கட்புலன் அதேபோன்று கட்புலனாகா தேசிய மரபுரிமைகளை இனங்காண்பதற்கு பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் வழிமுறையொன்றினைத் தயாரிக்கும் பொருட்டு உரிய துறைகள் சார்ந்த நிபுணர்களையும் கல்விமான்களையும் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.