• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்நோக்க அபிவிருத்தி பணி உதவியாளர்களை பயிற்றுவித்தல்
- பல்நோக்க அபிவிருத்தி செயலணி திணைக்களத்தினால் பல்நோக்க அபிவிருத்தி பணி உதவியாளர்கள் 100,000 பேரை ஆட்சேர்ப்புச் செய்யும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஆட்சேர்ப்புச் செய்யப்படும் சகலரும் 25 துறைகளின் ஊடாக பயிற்சிக்காக தொடர்புபடுத்தி தேசிய தொழிற் தகைமைகள் 3 ஆம் மட்ட (NVQ 3) சான்றிதழ் பெற்றவர்களாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நாடுமுழுவதும் 332 பிரதேச செயலகப் பிரிவுகளில் ஒரே தடவையில் 5 1/2 மாத கால பயிற்சி வழங்குவதனை தேசிய பயிலுநர், கைத்தொழில் பயிற்சியளித்தல் அதிகாரசபைக்கு கையளிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.