• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசா கட்டணங்கள் அறவிடும் செயற்பாட்டிற்குரியதான ஒழுங்குவிதிகளை திருத்துதல்
- 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, குடிவரவு, குடியகல்வுச் சட்டத்தின் கீழ் 1956 ஆம் ஆண்டில் வௌியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை தற்காலத்துக்கு ஏற்றவாறு திருத்துவதற்கு 2018 சனவரி மாதம் 09 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உரிய நோக்கத்திற்காக சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டதும் திருத்தப்பட்டதுமான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமானவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.