• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆயுத நூதனசாலையொன்றை நிறுவுதல்
- தொல்பொருள் அகழ்வின்போது கிடைத்துள்ள கல் ஆயுதங்கள் அடங்கலாக பழமைவாய்ந்த ஆயுதங்கள், பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு தற்போது புழக்கத்தில் இல்லாமற்போயுள்ள ஆயுதங்கள் மற்றும் நவீன ஆயுதங்களைச் சேகரித்து பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் என்பன பொருட்டு முறையான வேலைத்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, மாண்புமிக பிரதம அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பானது பரிசீலனை செய்யப்பட்டு தற்போது தேசிய நூதனசாலை திணைக்களத்தினால் நிருவகிக்கப்படும் மிகப் பொருத்தமான நூதனசாலையொன்றில் ஆயுதங்களைப் பாதுகாப்பதற்கு புறம்பான பிரிவொன்றைத் தாபிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.