• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
டிஜிட்டல் மூலோபாயங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் இலங்கை தகவல், தொடர்பாடல் தொழிநுட்ப முகவராண்மையைப் பலப்படுத்துதல்
- அரசாங்கத்தின் புதிய கொள்கை கட்டமைப்பின் கீழ் 2020-2025 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய டிஜிட்டல் கொள்கை மற்றும் திறமுறைகள் என்பன தொடர்பிலான சிபாரிசுகளைச் செய்யும் பொறுப்பானது இலங்கை தகவல், தொடர்பாடல் தொழிநுட்ப முகவராண்மைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த நிறுவனத்தினால் இலங்கைக்கான தேசிய டிஜிட்டல் கொள்கை மற்றும் மூலோபாயங்கள் என்பன தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்கையின் மூலம் பின்வருமாறு புதிய மூன்று நிகழ்ச்சித்திட்டக் கூறுகளை ஆரம்பிப்பதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

i. டிஜிட்டல் அரசாங்கம் - அரசாங்க நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் இத்தகைய நிகழ்ச்சித்திட்டங்களின் மூலம் பிரைசகளை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் என்பன இந்தக் கூறின் கீழ் செய்யப்படும்.

ii. டிஜிட்டல் பொருளாதாரதம் - ஆற்றல் அபிவிருத்தி, நவீன தொழினுட்பத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலம் புத்தாக்கங்கள், தொழில் முயற்சிகளையும் புதிய கம்பனிகளையும் ஆரம்பித்தல் மற்றும் நேரடி வௌிநாட்டு முதலீடுகளுக்குத் தேவையான சூழலை உருவாக்குவதன் மூலம் கைத்தொழில் அபிவிருத்திக்குத் தேவையான வசதிகளை வழங்குதல் என்பன இந்தக் கூறின் கீழ் செய்யப்படும்.

iii. டிஜிட்டல் சேவை - அரசாங்க சேவைகளுக்கான தகவல் தொழினுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை தாபித்தல், முகாமித்தல், பராமரித்தல், டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகளை ஆரம்பித்து நடாத்திச் செல்தல் போன்ற நோக்கங்களுக்குத் தேவையான ஆலோசனைச் சேவைகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் என்பன இந்தக் கூறின் கீழ் செய்யப்படும்.

இதற்கிணங்க, மேற்போந்த பணிகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்று வதற்கு இயலுமாகும் வகையில் இலங்கை தகவல், தொடர்பாடல் தொழிநுட்ப முகவராண்மையை மீளக் கட்டமைக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.