• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தணி டிஜிட்டல் ஆள் அடையாள கட்டமைப்பு மின்னணு தேசிய அடையாள அட்டை கருத்திட்டத்தின் காலத்தை நீடித்தல்
- 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' தேசிய கொள்கை பிரகடனத்தின் பிரதான பத்து நோக்கங்களில் ஒன்றான 'திறன் தேசிய இனம்' என்னும் நோக்கத்தினை வெற்றி கொள்ளும் பொருட்டு தணி டிஜிட்டல் ஆள் அடையாள கட்டமைப்பு மற்றும் அதற்கான வசதிகளை வழங்கும் திறமுறையொன்று அரசாங்கத்தினால் பின்பற்றப்படுவதோடு, இது தேசிய மட்டத்திலான நிகழ்ச்சித்திட்டமொன்றாக முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை தகவல், தொடர்பாடல் தொழினுட்ப முகவராண்மை ஆட்பதிவுத் திணைக்களத்துடன் இணைந்து இலங்கைக்கான தணி டிஜிட்டல் ஆள் அடையாள கட்டமைப்பானது தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ஆக்கக்கூறொன்றாக Biometric தேசிய அடையாள அட்டை கருத்திட்டமானது நடைமுறைப்படுத்துவதற்காக இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பின்வரும் பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* உரிய நிகழ்ச்சித்திட்டங்களை திட்டமிடும் குழுவினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ள இலங்கைக்கான தணி டிஜிட்டல் ஆள் அடையாள கட்டமைப்புக்கு அங்கீகாரம் வழங்குதல்.

* இலங்கைக்கான தணி டிஜிட்டல் ஆள் அடையாள கட்டமைப்புக்குத் தேவையான வழிகாட்டல்களைச் செய்யும் பொருட்டு சனாதிபதி செயலணியொன்றை நியமித்தல்.

* இலங்கைக்கான தணி டிஜிட்டல் ஆள் அடையாள கட்டமைப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பானது இலங்கை தகவல், தொடர்பாடல் தொழினுட்ப முகவராண்மைக்கு கையளித்தல்.

* இலங்கை தகவல், தொடர்பாடல் தொழினுட்ப முகவராண்மை ஆட்பதிவுத் திணைக்களத்துடன் இணைந்து மின்னணு தேசிய அடையாள அட்டை கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.

* இலங்கைக்கான தணி டிஜிட்டல் ஆள் அடையாள கட்டமைப்பு மற்றும் மின்னணு தேசிய அடையாள அட்டை கருத்திட்டம் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலகுவாக 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்தல் சட்டத்திற்குத் தேவையான திருத்தங்களைச் செய்தல்.

* இந்த கருத்திட்டத்தை 2020‑12‑31 ஆம் திகதியன்று முற்றாக்குதல்.