• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020‑11‑01 ஆம் திகதியிலிருந்து 2021‑06‑30 ஆம் திகதி வரையிலான எட்டு (08) மாத காலத்திற்குள் பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதி செய்வதற்கான தவணைக்கால ஒப்பந்தத்தை வழங்குதல்
- அமைச்சரவை யினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 2020‑11‑01 ஆம் திகதியிலிருந்து 2021‑06‑30 ஆம் திகதி வரையிலான எட்டு (08) மாத காலத்திற்கு பின்வருமாறு பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதி செய்வதற்கான தவணைக்கால ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 1,800,000 பெரல் பெற்றோல் இறக்குமதி செய்வதற்கான கேள்வியை ஐக்கிய அரபு இராச்சியத்தின் M/s. E3 Energy DMCC நிறுவனத்திற்கு வழங்குவதற்கும்.

* உச்ச சல்பர் நூற்றுவீதம் 0.05 கொண்ட 1,680,000 பெரல் டீசல் இறக்குமதி செய்வதற்கான கேள்வியை சிங்கப்பூரின் M/s. Swiss Singapore Overseas Enterprises (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு வழங்குவதற்கும்.