• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கந்தர மீன்பிடி துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- மாத்தறை மாவட்டத்தின் தெவிநுவர பிரதேச செயலாளர் பிரிவின் கந்தர மீன்பிடி துறைமுகத்தை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2019 யூலை மாதம் 07 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தத்தை RR SENOK JV நிறுவனத்திற்கு 5,367.69 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் (VAT இன்றி) கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு கடற்றொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.