• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழினுட்ப பீட கட்டடத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை வழங்குதல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியிடலின் மீது செயற்படுத்தப்படும் விஞ்ஞான மற்றும் தொழினுட்ப மனிதவள அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழினுட்ப பீட கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு சருவதேச ரீதயில் போட்டி கேள்வி வழிமுறை பின்பற்றப்பட்டுள்ளது. இதற்கிணங்க அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தத்தை M/s. International Construction Consortium (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு 3.01 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் மற்றும் 1,507.24 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.