• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ருகுணு பல்கலைக்கழகத்தின் துணை சுகாதார பீட கட்டடம் - 1 ஆம் கட்டத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- ருகுணு பல்கலைக்கழகத்தின் துணை சுகாதார பீட கட்டடத்தின் 1 ஆம் கட்டத்திற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2018 செப்ரெம்பர் மாதம் 11 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவி செய்யும் பொருட்டு தேசிய ரீதியில் போட்டிகரமான கேள்வி கோரும் வழிமுறை பின்பற்றப்பட்டுள்ளதோடு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தத்தை M/s. Sathuta Builders (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு 1,501.73 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு கையளிக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.