• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தை நிர்மாணிக்கும் பொருட்டு பொறியியல் மதியுரைச் சேவை நிறுவனமொன்றை தெரிவு செய்யும் ஒப்பந்தத்தை வழங்குதல்
- இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தை நிர்மாணிக்கும் பொருட்டு 187.5 மில்லியன் சவுதி ரியால் கொண்ட கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் சவுதி அபிவிருத்தி நிதியத்துடன் ஒப்பந்தமொன்றை செய்து கொண்டுள்ளது. இதற்கிணங்க இந்த மருத்துவபீடத்தை நிர்மாணிக்கும் நோக்கத்திற்காக பொருத்தமான மதியுரைச் சேவை நிறுவனமொன்றை தெரிவு செய்யும் பொருட்டு போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை சவுதி அரேபியாவின் M/s. DAR Engineering நிறுவனத்திற்கு 5.37 மில்லியன் சவுதி ரியால் கொண்ட தொகைக்கு கையளிக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.