• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இறாகம, பேரலந்த சதுப்பு நிலத்திற்கு அருகாமையில் பொழுதுபோக்கு பூங்காவொன்றை நிர்மாணித்தல்
- இறாகம, பேரலந்த குடியிருப்பு வலயத்தினுள் அமைந்துள்ள பேரலந்த சதுப்பு நிலத்திற்கு அருகாமையில் பொழுதுபோக்கு பூங்கா கருத்திட்டமொன்றை நடைமுறைப் படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க உத்தேச கருத்திட்டத்திற்குரிய ஒப்பந்தத்தை நேரடி ஒப்பந்தமொன்றாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு கையளிப்பதற்கும் இதற்குத் தேவையான மதியுரைச் சேவைகளை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் வழங்குவதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.