• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் காட்சிகூடங்களில் அரசாங்க நிறுவனங்களின் உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குதல்
- பின்வரும் அரசாங்க நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் உற்பத்திகளை ஏற்கக்கூடிய விலையில் ஒரே இடத்தில் நுகர்வோருக்கு பெற்றுக் கொள்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் தற்போது நாராஹேன்பிட்ட விசேட பொருளாதார நிலையத்தில் நடாத்திச் செல்லப்படும் இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் காட்சிகூடத்தை விரிவுபடுத்தி 'ரஜவாச' என்னும் பெயரில் விற்பனை நிலையமொன்றைத் தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

* இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனம்
* இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம்
* கல்வி வௌியீட்டுத் திணைக்களம்
* இலங்கை தேயிலைச் சபை
* அரசாங்க மருந்துப் பொருள் கூட்டுத்தாபனம்
* பி.சி.சி.லங்கா கம்பனி
* கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம்
* லங்கா சதொச நிறுவனம்
* இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்
* மாந்தை உப்புக் கம்பனி
* Litro Gas கம்பனி
* அரசாங்க மரக் கூட்டுத்தாபனம்
* வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி
* வ/ப இலங்கை உரக் கம்பனி
* மில்கோ நிறுவனம்
* தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை
* அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்

இதற்கிணங்க, தற்போது இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் காட்சிகூடம் நடாத்திச் செல்லப்படும் மனயைிடத்தை நவீனமயப்படுத்தி உத்தேச 'ரஜவாச' விற்பனை நிலையத்தினை தாபிக்கும் பொருட்டு வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.