• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை ஆரபொக்க தோட்டத்தில் மருந்து உற்பத்திக்காக ஒதுக்கப்பட்ட வலயமொன்றைத் தாபித்தல்
- பொருளாதார புத்துயிரளிப்பு மற்றும் வறுமை ஒழிப்பு பற்றிய சனாதிபதி செயலணியினால் நேரடியாக வௌிநாட்டு முதலீடுகளை கவரக்கூடிய மற்றும் அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய சாத்தியமுள்ள தொழில் ஒன்றாக மருந்து உற்பத்தி தொழில் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க அம்பாந்தோட்டை ஆரபொக்க தோட்டத்தில் 400 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியில் உலகின் பிரதான மருந்து உற்பத்திக் கம்பனிகளை கவர்வதற்கு இயலுமாகும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய விசேட மருந்து உற்பத்தி வலயமொன்றைத் தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. திறமுறை அபிவிருத்தி கருத்திட்ட மொன்றாக பிரகடனப்படுத்தி இந்த மருந்து உற்பத்தி வலயத்தில் முதலீடு செய்ய முன்வரும் முதலீட்டாளர்களுக்கு ஏற்புடையதாகும் சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கருத்திட்டத்தின் முதலாவது கட்டமாக 200 ஏக்கரில் 20 மருந்து உற்பத்திக் கம்பனிகளைத் தாபிப்பதற்கும் இரண்டாம் கட்டமாக மேலும் 200 ஏக்கரில் 20 மருந்து உற்பத்திக் கம்பனிகளைத் தாபிப்தபற்கும் இலங்கை முதலீட்டுச் சபையின் ஊடாக தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கும் சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.