• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடற்கரைக்கு அப்பால் மணல் அகழ்வதற்காக மணல் பெற்றுக் கொள்ளும் பிரதேசத்தை (Borrow Area) குறித்தொதுக்குதல்
- நிர்மாணிப்பு கைத்தொழில் சார்பிலும் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் செயற்படுத்தப்படும் கருத்திட்டங்கள் சார்பிலும் மணல் பெற்றுக் கொள்ளும் பொருட்டு கடற்கரைக்கு அப்பால் மணல் அகழ்வதற்காக மணல் பெற்றுக் கொள்ளும் பிரதேசத்தை நீண்டகால அடிப்படையில் ஒதுக்கிக் கொள்ளும் தேவை எழுந்துள்ளது. இந்த நிறுவனத்தினால் 1994 ஆம் ஆண்டிலிருந்து அனுமதிப் பத்திரத்தின் மீது 61 கிலோமீற்றர் கடற்கரைக்கு அப்பால் மணல் அகழ்வதன் மூலம் தேவையான மணலைப் பெற்றுக் கொண்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, சுற்றடாடல் தாக்க மதிப்பீடொன்றைச் செய்வதற்கு உட்பட்டு மேலும் பத்து வருட காலத்திற்கு குறித்த 61 கிலோமீற்றர்கள் கொண்ட கடற்கரைக்கு அப்பால் உள்ள பிரதேசத்தில் மணல் அகழ்வதற்காக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு அனுமதி வழங்கும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.