• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலிஸ் ஒத்துழைப்பு தொடர்பிலான மாதிரி புரிந்துணர்வு உடன்படிக்கை
- நவீன தொழினுட்பத்தைப் பயன்படுத்தி வினைத்திறமையுடன் பொலிஸ் பணிகளை நிறைவேற்றும் வௌிநாட்டு பொலிஸ் அமைப்புகளுடன் இருதரப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை செய்து கொள்வதன் மூலம் நாட்டின் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அவர்களுடைய அனுபவம், அறிவு, ஆற்றல், நவீன பொலிஸ் கடமைகள் தொடர்பில் சருவதேச ரீதியில் ஏற்றுக் கொண்ட நடைமுறைகள் செயற்பாடுகள் மற்றும் தரங்களை பகிர்ந்து கொள்வதற்கு இயலுமாகும் என அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால், பயங்கரவாத செயற்பாடுகள், பங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி சேகரித்தல், போதைப்பொருள் சம்பந்தமான குற்றங்கள், மனித வியாபாரம், கள்ளக்கடத்தல், வௌ்ளைப் பணமாக்கல், கனணி குற்றங்கள் போன்ற பதினேழு (17) துறைகளின் கீழ் ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கு வௌிநாட்டு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் வௌிநாட்டு பொலிஸ் அமைப்புகளுடன் பொலிஸ் என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் ஊடாக புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமானவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.