• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளுக்கு சீருடை வழங்கும் பொருட்டு உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட சேலை வழங்குதல் - 2020
- நாடு பூராகவுமுள்ள பௌத்தமத அறநெறிப் பாடசாலைகளில் சேவைபுரியும் ஆசிரியைகளுக்கு 2004 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சீருடை வழங்கப்பட்டு வருகின்றதோடு, இதற்கிணங்க, 2020 ஆம் ஆண்டிலும் பௌத்தமத அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு சீருடைகளாக வழங்கும் பொருட்டு 76,000 சேலைகள் தேவைப்படுகின்றன. இதன் பொருட்டு உள்நாட்டு துணி உற்பத்தியாளர்களினால் உற்பத்தி செய்யப்படும் 76,000 சேலைகள் அதாவது சேலையொன்று 2,400/- வீதம் 182.4 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு லங்கா சலுசலா நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்து வழங்கும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.