• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வாசனை சரக்கு மற்றும் அதுசார்ந்த உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபையை மீளத்தாபித்தல்
- 1972 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கமத்தொழில் கூட்டுத்தாபன சட்டத்தின் 2 ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் கீழ் வாசனை சரக்கு மற்றும் அதுசார்ந்த உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபை தாபிக்கப்பட்டதோடு, இந்த சபையின் பணிளை ஏற்றுமதி கமத்தொழில் திணைக்களத்திற்கு கையளித்து 2008 யூலை மாதம் 27 ஆம் திகதியிலிருந்து மூடவேண்டுமென 2008 யூலை மாதம் 16 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாசனை சரக்கு மற்றும் அதுசார்ந்த உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபையானது தற்போது கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்ட பயிர்ச் செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சினால் இனங்காணப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முறையான பொறிமுறை யொன்றின் தேவை உள்ளமையினால் வாசனை சரக்கு மற்றும் அதுசார்ந்த உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபையை மீள செயற்படுத்தி அதன் பணிகளை நடாத்திச் செல்லும் பொருட்டு பெருந்தோட்டத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.