• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சார்பில் நாளொன்றுக்கு 100,000 பெரல் புதிய சுத்திகரிப்பு நிலையமொன்றை சப்புகஸ்கந்தவில் தாபித்த
- சப்புகஸ்கந்தவில் தாபிக்கப்பட்டுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான சுத்திகரிப்பு நிலையத்தின் தற்போதைய ஆற்றலானது நாளொன்றுக்கு சுமார் 40,000 பெரல் மசகு எண்ணெய் ஆகும். இதன் காரணமாக சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திக்கான உள்நாட்டு கேள்வியில் சுமார் 25 சதவீதம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக பூர்த்தி செய்யப்படுகின்றது. அந்நிய செலாவணி மீது பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி மீதி 75 சதவீதமான அளவினை இறக்குமதி செய்ய நேரிட்டுள்ளது. நாளொன்றுக்கு 100,000 பெரல் வரை இந்த ஆற்றலை அதிகரிப்பதற்கு இயலுமாகும் வகையில் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை விரிவுபடுத்தி நவீனமயப்படுத்துவதற்கு 2010 ஆம் ஆண்டில் சாத்தியத் தகவாய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அதன் பின்னர் இந்த துறையிலே ஏற்பட்டுள்ள தொழினுட்ப ரீதியிலான மாற்றங்களினால் இந்த சாத்தியத் தகவாய்வின் மீது தொடர்ந்தும் செயலாற்ற முடியாதுள்ளது.

ஆதலால், தற்போதுள்ளள பெற்றோலிய உற்பத்தி சுத்திகரிப்பு ஆற்றலை அதிகரிப்பதற்கு மாற்று பிரேரிப்புகள் சில பற்றி கவனம் செலுத்தி நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்திட்டத்தின் விடயநோக்கெல்லை, தொழினுட்பம், கையாள்கை மற்றும் நிதிசார் தேவைகளை நிர்ணயித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் புதிய சாத்தியத் தகவாய்வொன்றினை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.