• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் பசளை உற்பத்தி மற்றும் விநியோகத்தினை முறைப்படுத்துதல்
- ஆரோக்கியமான உணவு உற்பத்தி செயற்பாட்டிற்கு தரம் மிக்க பயிர் உற்பத்திக்கு சாதகமான நிலைபேறுடைய மண்ணின் தரத்தினைப் பேணும் பொருட்டு பசளை உற்பத்தி, விநியோகம் மற்றும் பாவனை என்பவற்றை விஞ்ஞான அடிப்படையில் செயற்படுத்துதல் வேண்டும். ஆதலால், பசளை விரயம், பற்றாக்குறை, தரமற்றதாக இருத்தல் என்பன ஏற்படாத விதத்தில் பொருத்தமான தொழினுட்ப வழிமுறைகளுடன் கூடிய முறையான பசளை விநியோக முகாமைத்துவ செயற்பாடொன்று பின்பற்றப்பட வேண்டியுள்ளது. இதற்கிணங்க, தேசிய பசளை செயலகம் நவீன தொழினுட்பங்களைக் கொண்டிருத்தல், தற்போதுள்ள ஆய்வுகூடங்களை விருத்தி செய்தல், இலங்கை நநோ தொழினுட்ப நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தாபிக்கும் கள பரிசோதனை பொறிமுறை அடங்கலாக மாவட்ட மட்டத்தில் தொழிற்பாட்டு, மதிப்பிடல் முறைமையினைப் பலப்படுத்துதல் என்பவற்றை உள்ளடக்கி இலங்கை தகவல், தொடர்பாடல் தொழிநுட்ப முகவராண்மையின் ஆலோசனையின் மீது சுயமாக இயங்கும் மையப்படுத்தப்பட்ட வழிமுறை யொன்றினை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞான ரீதியில் தரம்வாய்ந்த மற்றும் ஆக்கக்கூறுகளைக் கொண்ட உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவ தற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.