• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யானைகள் - மனித மோதலை குறைப்பதற்காக மின்சார வேலிகள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் அமைப்பதற்கு இலங்கை புகையிரத திணைக் களத்தினால் அப்புறப்படுத்தப்படும் தண்டவாளங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளல்
- இலங்கையின் 19 மாவட்டங்களில் அமைந்துள்ள 133 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தற்போது யானைகள் - மனித மோதல் நிலவுகின்றமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்து வதற்கு வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் பின்பற்றப்பட்டு வரும் பல்வேறுபட்ட திறமுறைகளில் பாதுகாப்பு வேலிகள் மற்றும் மின்சார வேலிகள் என்பவற்றை நிர்மாணித்தல் பிரதானமானவையாகும். ஏற்கனவே சுமார் 4,500 கிலோ மீற்றர் மின்சார வேலிகள் மேற்குறிப்பிட்ட 133 பிரதேச செயலாளர் பிரிவுகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் சுமார் 1,500 கிலோ மீற்றர் மின்சார வேலிகளும் பாதுகாப்பு வேலிகளுடனான யானைகள் தங்குமிடங்களும் நிர்மாணிக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வேலிகளை நிர்மாணிப்பதற்கு தற்போது மரத் தூண்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் காட்டு யானைகள் அடிக்கடி அவற்றை தள்ளி வீழ்த்துவதோடு, இதற்காக கொங்கிறீட் தூண்களை பயன்படுத்தினாலும் அவற்றை மீள சீர்செய்வ தற்கு சிரமங்கள் நிலவுவதால் இதுவும் நடைமுறைச்சாத்தியமற்றதாகும்.

இதற்கிணங்க, இந்த நோக்கத்திற்கான மாற்று வழியாக அப்புறப்படுத்தப்பட்ட தண்டவாளங்களை பயன்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதோடு, இதற்காக புகையிரத திணைக்களத்தினால் அப்புறப்படுத்தப்படும் தண்டவாளங்களை வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு இலவசமாக வழங்கும் பொருட்டு வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சரினாலும் போக்குவரத்து அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.