• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-11-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொலைக்கல்வி முறையின் கீழ் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளைப் பயன்படுத்தி கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்த
- 19 தொற்று நிலைமை காரணமாக பாடசாலைகளில் உரிய முறையில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எதிர் நோக்கப்படும் சிரமங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, தொலைக் கல்வி முறையின் கீழ் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களை பயன்படுத்தி கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு "Eye அலைவரிசை" மற்றும் "நேத்ரா அலைவரிசை" என்பவற்றைப் பயன்படுத்துவதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது COVID - 19 தொற்று நிலைமை மீண்டும் நாட்டில் காணப்படுகின்றமையினால் உரிய முறையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது நடைமுறை சாத்தியமற்றதென தெரியவருகின்றதோடு, கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு உயர் தொலைக் கல்வி முறைகள் அத்தியாவசியமானதென அவதானிக்கப் பட்டுள்ளது. ஆதலால், 3 ஆம் தரத்திலிருந்து 13 ஆம் தரம் வரை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தொலைக்காட்சி கல்வி நிகழ்ச்சித்திட்டங்களைத் தயாரித்து ஔிபரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தேசிய கல்வி நிறுவனமும் கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சும் இணைந்து அரசாங்க மற்றும் தனியார் தொலைக்காட்சி சேவைகள் மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஒத்தாசையுடன் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.