• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியின் மத்தியில் தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவது சம்பந்தமாக உடன்பாடு காணப்பட்ட சலுகை காலப்பகுதியை நீடித்தல்
- COVID - 19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியின் மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவது சம்பந்தமாக தொழில் கொள்வோர், தொழிற்சங்கங்கள், தேசிய தொழில் ஆலோசனைச் சபை, தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களம் என்பவற்றினை பிரதிநிதித்துவப்படுத்தி செயலணியொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த செயலணி 2020 மே மாதம் தொடக்கம் செப்ரெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் பின்வருமாறு நடவடிக்கை எடுப்பதற்கு உடன்பட்டு, அதற்கிணங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

* COVID - 19 தொற்று காரணமாக பணிகள் நிறுத்தப்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களை தொழிலில் தொடர்ந்தும் வைத்திருத்தல்.

* சமூக இடைவௌியினைப் பேண நேர்ந்துள்ளதன் காரணமாக நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களையும் சேவையில் ஈடுபடுத்த முடியாத நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களை வேலை முறையின் கீழ் அல்லது வேறு பொருத்தமான வழிமுறையொன்றின் கீழ் சம அளவில் சேவை புரியக்கூடிய விதத்தில் ஈடுபடுத்துவதற்கு இயலுமாகும் வகையில் நடவடிக்கை எடுத்தல்.

* வேலைகள் இல்லாததன் காரணமாக ஊழியர்களை வீடுகளில் முடக்கி வைக்கும் தேவை ஏற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு அவர்கள் இறுதியாகப் பெற்ற மொத்த சம்பளம் செலுத்தப்பட்ட மாதத்திற்குரிய அடிப்படைச் சம்பளத்தின் 50 சதவீதம் அல்லது 14,500/- ரூபா என்னும் இரண்டில் மிக பயனுள்ள தொகையை செலுத்துதல்.

* இவ்வாறு செலுத்தப்பட்ட சம்பளம் சார்பில் தொழில் கொள்வோரினால் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கும் பங்களிப்புத் தொகையினை செலுத்துதல்.

COVID - 19 தொற்று நிலைமை தொடர்ந்தும் நாட்டில் பரவி வருகின்றமையினால் இந்த ஆண்டின் திசெம்பர் மாதம் வரை மேலே குறிப்பிடப்பட்டவாறு நடவடிக்கை எடுப்பதற்கு குறித்த செயலணி உடன்பட்டுள்ளமை பற்றி தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.