• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் கமத்தொழில் விஞ்ஞான பீடம் சார்பில் பீட கட்டடத் தொகுதியினை நிர்மாணிக்கும் (கட்டம் 1) ஒப்பந்தத்தை வழங்குதல்
- இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் கமத்தொழில் விஞ்ஞானபீடம் சார்பில் பீட கட்டடத் தொகுதியினை (கட்டம் 1) நிர்மாணிப்பதற்கு தேசிய ரீதியிலான போட்டி கேள்வி நடவடிக்கைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்த ஒப்பந்தத்தை 797.81மில்லியன் ரூபா (VAT இன்றி) கொண்ட தொகைக்கு குருநாகல் Sathuta Builders (Pvt.) Ltd., கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.