• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான துறைகளின் அபிவிருத்தி மற்றும் தொழில் உருவாக்கம் என்பன பொருட்டு கடன் வசதிகளை வழங்குவதற்காக 'சுவசக்தி' கடன் திட்டத்தை திருத்துதல்
- 2017 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கி மற்றும் இளைஞர் விவகாரம் என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் சிறிய தொழில்முயற்சி அபிவிருத்தி பிரிவு என்பன இணைந்து 3,500 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தி "சுவசக்தி கடன் திட்டம்" ஆரம்பிக்கப்பட்டது. வர்த்தக வங்கிகளின் ஊடாக இந்த கடன் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதோடு, ஒப்பேறு வளவாய்ப்பு கருத்திட்ட திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தொழில்முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு இதன்மூலம் கடன் வழங்கப்படும். தற்போது இந்த கடன் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 13,890 தொழில் முயற்சியாளர்களுக்கு 3,064 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நடைமுறை தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் கருத்திட்டத்தின் தன்மையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 18 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்ட இளம் தொழில்முயற்சியாளர்களுக்கு பின்வரும் வர்த்தக துறைகளுக்குரிய சிறிய மற்றும் நடுத்தர அளவிலான புதிய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆகக்கூடுதலாக ஒரு மில்லியன் ரூபாவுக்கு உட்பட்டு, கடன் வழங்குவதற்காக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
* தகவல் தொழினுட்பம் மற்றும் கணனி சார்ந்த கருத்திட்டங்கள்.
* கமத்தொழில், கறவைப் பசுக்கள் மற்றும் மிருக வளர்ப்பு கருத்திட்டங்கள்.
* சுற்றுலாத்துறை மேம்பாடு சார்ந்த கருத்திட்டங்கள்.
* புத்தாக்க மற்றும் இயந்திரசாதன கருத்திட்டங்கள்.
* உணவு பதனிடல் உற்பத்தி சார்ந்த கருத்திட்டங்கள்.