• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
றைகம்கோரளே தேயிலை சக்தி தேயிலைக் கைத்தொழிற்சாலையை றைகம் சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி சங்கத்திற்கு வழங்குத
- றைகம்கோரளே தேயிலை சக்தி தேயிலைக் கைத்தொழிற்சாலையை குத்தகை அடிப்படையில் பெற்றிருந்த திக்ஹேன சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி சங்கத்தினால் இந்த தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை 2019 ஏப்ரல் மாதத்திலிருந்து நிறுத்தியுள்ளதன் காரணமாக கொழுந்து வழங்கி வந்த சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்த தொழிற்சாலைக்கு தேயிலைக் கொழுந்து வழங்கிய சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு, தரகு கம்பனிகளுக்கு மற்றும் ஏனைய வௌிவாரி தரப்பினர்களுக்கு திக்ஹேன சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி சங்கத்தினால் சுமார் 42 மில்லியன் ரூபா செலுத்தவேண்டியுள்ளது. குறித்த தேயிலை தொழிற்சாலையின் பணிகளை மீள ஆரம்பிக்குமாறு பிரதேசத்தைச் சேர்ந்த சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தொழிற்சாலை உற்பத்திப் பணிகளை நடாத்திச் செல்வதற்கு நிதிப் பலமுள்ள மற்றும் சுமார் 1,800 உறுப்பினர்களைக் கொண்ட றைகம் சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி சங்கத்திற்கு இந்த தொழிற்சாலையை குத்தகை அடிப்படையில் வழங்கும் பொருட்டு பெருந்தோட்டத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.