• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-10-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சை செயன்முறையை நவீனமயப்படுத்தல்
- இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் பிரதானமாக ஆண்டொன்றில் பாடசாலை கல்விக்குரியதாக 04 தேசிய பரீட்சை களையும் சுமார் 325 நிறுவன ரீதியிலான பரீட்சைகளையும் நடாத்துகின்றது. இந்த பரீட்சைகளை நடாத்துவதற்கான பெரும்பாலான பணிகள் திணைக்களத்தின் பணியாட்டொகுதியினரினால் வழமையான அலுவலக முறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்படுகின்றதோடு, பரீட்சைகளின் செம்மை மற்றும் நம்பகத்தன்மை என்பவற்றைப் பாதுகாப்பதற்கு பரீட்சை செயன்முறையை டிஜிட்டல் மயப்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சை முகாமைத்துவ செயன்முறையை நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான இணையத்தள வசதிகள் அடங்கலாக புதிய தொழினுட்பக் கருவிகளை கொள்வனவு செய்வதற்கும் இந்தக் கருவிகளை பயன்படுத்தும் வகையில் திணைக்களத்தின் உரிய பணியாட்டொகுதியினரை பயிற்றுவிப்பதற்கும் பரீட்சைகளை மதிப்பிடும் பணிகளை இலகுபடுத்துவதற்கு மாகாண மட்டத்தில் பரீட்சை மதிப்பீட்டு நிலையங்களைத் தாபிப்பதற்கும் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.